மேலும் செய்திகள்
மது போதையில் தொழிலாளி இறப்பு
06-Mar-2025
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே பாலூத்தை சேர்ந்தவர் ராம்குமார் 34, இவருக்கும் கடமலைக்குண்டைச் சேர்ந்த பின்னியம்மாள் மகள் வினிதாவிற்கும் 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பிரிந்திருந்த கணவன் மனைவியை பெரியோர்கள் முன்னிலையில் சமாதானம் செய்து கடமலைக்குண்டில் தனி வீட்டில் குடியிருக்க செய்தனர் இந்நிலையில் ராம்குமார் மீண்டும் மனைவியுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். 2022ல் மனைவி வினிதா கொடுத்த புகாரில் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி குடும்ப நல கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. நிலையில் வினிதா மற்றும் அவரது இரு குழந்தைகளை பின்னியம்மாள் தனது பாதுகாப்பில் வைத்திருந்தார். மூன்று நாட்களுக்கு முன் வினிதா வீட்டில் இருந்தபோது அவருடன் கணவர் தகராறு செய்துள்ளார். தட்டிக் கேட்டபோது பின்னியம்மாள், வினிதா இருவரையும் ராம்குமார் தாக்கி உள்ளார். பின்னியம்மாள் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.
06-Mar-2025