உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டிற்கு வர மனைவி மறுப்பு கணவர் தற்கொலை

வீட்டிற்கு வர மனைவி மறுப்பு கணவர் தற்கொலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அணைக்கரைபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் ரஞ்சித் குமார் 37, விவசாயம் செய்து வந்தார்.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்கச் சென்ற ரஞ்சித்குமார் மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.மனைவி மறுத்து விட்டதால் சில நாட்கள் கழித்து அனுப்பி வைப்பதாக மனைவியின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் மனம் உடைந்த ரஞ்சித்குமார் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.ரஞ்சித் குமார் தாயார் சுருளியம்மாள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி