உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலுவலக கட்டட திறப்பு விழா

அலுவலக கட்டட திறப்பு விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் தா.பாண்டியன் நினைவாக இந்திய கம்யூ., கட்சி ஒன்றியக்குழு அலுவலகத்திற்கு ரூ.15 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி தலைமையில் நடந்தது. ஆண்டிபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் முனீஸ்வரன் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் வேல்சாமி கொடி ஏற்றினார். இந்திய கம்யூ., மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சுப்புராயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்தானம், ரவி, வழக்கறிஞர் அழகிரிசாமி உட்பட பலர் வாழ்த்தி பேசினர். ஒன்றியக்குழு பிரபாகரன் நன்றி கூறினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை