உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழகத்தில் டி.டி.எஸ்., தாக்கல் செய்யாததால் ரூ.981 கோடி நிலுவை அரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

தமிழகத்தில் டி.டி.எஸ்., தாக்கல் செய்யாததால் ரூ.981 கோடி நிலுவை அரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

தேனி:தமிழகத்தில் வருமான வரித்துறைக்கு அரசு சார்பில் டி.டி.எஸ்., (வருமான வரிப் பிடித்தம்) தாக்கல்செய்வதன் மூலம் சேர வேண்டிய ரூ.981 கோடி நிலுவையில் உள்ளதால், கணக்குகளை முறையாக தாக்கல்செய்ய வேண்டும்' என மாநில வருமான வரித்துறை ஆணையரகம் அரசுக்கு 'நோட்டீஸ்'அனுப்பியுள்ளது.தமிழகத்தில் மாவட்டந்தோறும் 42 அரசுத்துறைகள் இயங்குகின்றன. கருவூலம் மூலம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வது வழக்கம். காலாண்டுக்கு ஒரு முறை டி.டி.எஸ்., தாக்கல் செய்ய வேண்டும். இதில் வருமான வரித்துறையின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்ட கால இடைவெளியில் டி.டி.எஸ்., தாக்கல் செய்யாதவர்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2007 -- 2008 முதல் 2023 -- 2024 நிதியாண்டு வரை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை தொழில்நுட்பம், கருவூலத்துறையின் தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் ரூ.981 கோடி வருமானவரி தாக்கல்செய்யாமல் உள்ளது. இதனால் உடனடியாக டி.டி.எஸ்., தாக்கல் செய்வதன் மூலம் வரியினங்களை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை ஆணையரகம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 'மாநிலத்தில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சரியான நேரத்தில் டி.டி.எஸ்., தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தியும்,பல தாலுகா அலுவலகங்களில் இதனை கண்டு கொள்வது இல்லை எனவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டிற்கு மட்டும் ரூ.12 கோடியே 85 லட்சத்து 20 ஆயிரத்து938 செலுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள்அறுவுறுத்தலில் ஆய்வு செய்த மாவட்ட கருவூலத்துறையினர் வரி செலுத்தாத தாலுகா அலுவலகங்களை விரைவில் டி.டி.எஸ்., கணக்குகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ