மேலும் செய்திகள்
மீண்டும் No 1 இடத்தை பிடிக்குமா GT?
28-Apr-2025
No 1 இடத்தை பிடிக்குமா டெல்லி? DC vs KKR
29-Apr-2025
மூணாறு : மூணாறு நகரில் டிவைடர்கள் குறித்து முன் அறிவிப்பு, பாதுகாப்பு ஏற்பாடு ஆகியவை இன்றி விபத்துகள் அதிகரித்து வருகின்றன.மூணாறு நகரில் தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் முதல் ஜி.எச்., ரோட்டில் ஐ.என்.டி.யு.சி. அலுவலகம் வரை ரோட்டின் மைய பகுதியில் சிமென்ட் கற்களை கொண்டு ஒரு அடி உயரத்தில் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் டிவைடர் இன்றியும், சில இடங்களில் வாகனங்கள் திரும்பிச் செல்ல இடைவெளியும் விடப்பட்டுள்ளது. டிவைடர் ஆரம்பிக்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் முன் அறிவிப்பு போர்டுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. அதனால் டிவைடர்களில் வாகனங்கள் மோதி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இறுதியாக நேற்று முன்தினம் நகரில் ஜி.எச்., ரோட்டில் மெயின் பஜார்க்கு எதிரே மூவாற்றுபுழாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கார் டிவைடரில் மோதியது. உடல் நிலை பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வாகனம் விபத்தில் சிக்கியது. ஆகவே டிவைடர்களில் முன் அறிவிப்பு போர்டுகள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
28-Apr-2025
29-Apr-2025