உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மஞ்சளாறு அணை புதை மணலில் ஆபத்தான குளியல் அதிகரிப்பு

மஞ்சளாறு அணை புதை மணலில் ஆபத்தான குளியல் அதிகரிப்பு

தேவதானப்பட்டி, : மஞ்சளாறு அணை புதை மணலில் கடந்த 5 ஆண்டுகளில் எட்டு பேர் இறந்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் குளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. 55 அடி அளவிற்கே நீர் தேக்கப்படும். தற்போது அணை நிரம்பிபாசனத்திற்கு திறக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மஞ்சளாறு அணைப்பகுதியில் புதை மணல் உள்ளதால் அப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மஞ்சளாற்றில் மணல் அள்ளவோ, மது அருந்தவோ, சமூக விரோத செயல்களில் ஈடுபடவோ மற்றும் ஆற்றுப் பகுதியில்துணி துவைத்து அசுத்தம் செய்யக்கூடாது. மீறினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி தினமும் சிலர் குளிப்பது தொடர்கிறது.இங்கு ஆபத்தை உணராமல் அத்துமீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி