மேலும் செய்திகள்
வராகநதியில் பெண் உடல் மீட்பு
02-Nov-2024
பெரியகுளம் : மாவட்டத்தில் சோத்துப்பாறை அணையில் அதிகபட்சமாக 123.2 மி.மீ., மழை பெய்ததால் தொடர்ந்து மறுகால் பாய்கிறது. இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதி, சோத்துப்பாறை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையின் உயரம் 126.28 அடியும் நிரம்பி, 100 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ளது. பாசனத்திற்கு அக்.17ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பழைய, புதிய ஆயக்கட்டு, பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவை உட்பட பெரியகுளம், கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 2,864 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அக்.20 முதல் மறுகால் பாய்கிறது. நேற்று அணைக்கு இந்தாண்டின் அதிக பட்சமாக வினாடிக்கு 534.70 கன அடி நீர் வரத்தும், அப்படியே வெளியேறி வராகநதியில் கலக்கிறது. இந்தாண்டு அதிகபட்சமாக தண்ணீர் வரத்து இதுவே முதல் முறையாகும். இதனால் வராகநதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. வராகநதி செல்லும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர் வளத்துறையினர் தெரிவித்தனர்.-
02-Nov-2024