உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்குவரத்து விதிமீறல்களால் விபத்து அபாயம் அதிகரிப்பு! வட்டார போக்குவரத்து துறை ஆய்வு தேவை

போக்குவரத்து விதிமீறல்களால் விபத்து அபாயம் அதிகரிப்பு! வட்டார போக்குவரத்து துறை ஆய்வு தேவை

கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டியை மையமாக வைத்து 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆண்டிபட்டி மையமாக வைத்து 100க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், பல ஆயிரம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 2 கி.மீ., தூரம் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையுடன் வத்தலகுண்டு, ஏத்தக்கோயில், வைகை அணை, தெப்பம்பட்டி நெடுஞ்சாலை ரோடுகள் இணைகின்றன. இந்த ரோடுகளில் அன்றாடம் இயக்கப்படும் வாகனங்களால் ஆண்டிபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் தினமும் விபத்து அபாயம் தொடர்கிறது. சரக்கு வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றுதல், கம்பிகள், குச்சிகள், கம்புகள் வாகனங்களின் வெளியில் நீட்டியபடி செல்வது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு, விபத்து அபாயம் ஏற்படுத்துவதாக உள்ளன. ஆட்டோக்களில் அதிகளவில் ஆட்களை ஏற்றி, டிரைவரின் இரு பக்கமும் அமர செய்து அபாயகரமான பயணத்தை தொடர்கின்றனர். இருசக்கர வாகனங்களில் மூன்று, நான்கு நபர்கள் அமர்ந்து செல்வது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அன்றாடம் தொடர்கிறது.கடந்த சில வாரங்களாக போலீசார் தேர்தல் பணி, கோயில் விழா பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால் போக்குவரத்து விதி மீறல்கள் ஆண்டிபட்டி பகுதியில் கண்டு கொள்ளப்படவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலர்களும் என்றாவது ஒருநாள் திடீர் விசிட் செய்து செல்கின்றனர். அவர்களின் வருகை முன்கூட்டியே தெரிந்து விடுவதால் வாகன ஓட்டிகள் 'அலாட்' ஆகி விடுகின்றனர். அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் விதிமீறல் பயணங்கள் தொடர்கிறது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார், வட்டார போக்குவரத்து துறை ஆய்வு நடத்திட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ