உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி எல்லையில் கோட்டை விடும் சோதனையால் கடத்தல் அதிகரிப்பு ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க வலியுறுத்தல்

குமுளி எல்லையில் கோட்டை விடும் சோதனையால் கடத்தல் அதிகரிப்பு ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க வலியுறுத்தல்

குமுளி எல்லையில் முழுமையான சோதனை இல்லாததால் ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைத்து அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குப் பின்பே அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது குமுளி மலைப்பாதை. குமுளி அருகே கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ள தேக்கடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். மேலும் சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை காலகட்டங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் வருவதால் குமுளி மலைப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கேரள பகுதியில் அனைத்து துறை சோதனை சாவடிகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. தமிழகத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் முழுமையான சோதனைக்குப் பின்பே கேரளாவிற்குள் அனுமதிக்கின்றனர். ஆனால் தமிழகப் பகுதியில் முழுமையான சோதனை மேற்கொள்வதில்லை. எல்லையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி, பழைய பஸ் டெப்போ அருகில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி பெயரளவிலேயே உள்ளது. லோயர்கேம்பில் இயங்கி வந்த ஆர்.டி.ஓ., சோனைச் சாவடி 14 ஆண்டுகளுக்கு முன்பு தேனி பழனிசெட்டிபட்டிக்கு மாற்றப்பட்டது. மலைப்பாதையில் இருந்த வருவாய்துறைச் சோதனைச் சாவடி சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இது போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடத்தல் கும்பல் ரேஷன் அரிசி கடத்தலை தாராளமாக செய்து வருகின்றனர். ரேஷன் அரிசி கேரளாவிற்கு தேவைப்படும் என்பதால் கேரள சோதனை சாவடிகளில் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. அதேபோல் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் பல்வேறு கழிவுகளை கேரள சோதனைச் சாவடியில் கண்டு கொள்வதில்லை. இதனால் கழிவுகளை கொட்டுவதையும், ரேஷன் அரிசி கடத்தலையும் தடுக்க முடியவில்லை. லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வு 2 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆனால் தொடர் நடவடிக்கை இல்லாததால் திட்டம் கைவிடப்பட்டது. கடத்தலை முழுமையாக தடுக்க வகையில் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் சோதனை மேற்கொள்வதற்கு வசதியாக ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி