உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உணவுப் பொருட்களில் செயற்கை நிறமி, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு 

உணவுப் பொருட்களில் செயற்கை நிறமி, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு 

தேனி : மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் செயற்கை நிறமி பயன்பாடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டத்தில் அசைவ ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் ஏராளமாக உள்ளன. சில கடைகளில் உணவுகளில் செயற்கை நிறமி பயன்பாடு அதிகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையினர் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டாலும், செயற்கை நிறமிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.குறிப்பாக மாலை, இரவில் ரோட்டின் ஓரங்களில் செயல்படும் பாஸ்ட் புட், அசைவ விற்பனை கடைகளில் இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. உணவுப் பாதுகாப்புத் துறையினர் பகல் வேளையில் மட்டும் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். செயற்கை நிறமிகளால் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படும் என தொடர்ந்து எச்சரித்தாளும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் பெயரளவில் செயல்படாமல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை தடை செய்யவும், பயன்படுத்தும் கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் கூறுகையில், 'மாவட்டத்தில் ஓட்டல்கள், ரோட்டோர கடைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களின் தரம் குறைவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் நேரடியாக தெரிவிக்கலாம்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை