மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
தேனி; தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா பள்ளி, கல்லுாரிகள், நிறுவனங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கீதா கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கணேசன்,எழுத்தர் வாசிமலை பங்கேற்றனர். தேனி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., தேவராஜ் கொடி ஏற்றினார். எழுத்தர்கள் பெரியசாமி,பால்பாண்டி, நாகேந்திரன் பங்கேற்றனர். அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., மணிகண்டன், பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஜெயபால், தேனி போலீஸ் ஸ்டேஷனில்இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி கொடி ஏற்றினர். தேனி சுப்பன் செட்டி தெரு மதரஸா அய்னுல் ஹூதா அரபி பாடசாலை, வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல்வர் முகம்மதுபாரூக் ஹஜரத் கொடி ஏற்றினார். வட்டார உலமா சபையின் தலைவர் அப்துல்ஹக்கீம் ஹஜ்ரத் தலைமைவகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். தேனி கம்மவார் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் கல்லுாரிச் செயலர் தாமோதரன் கொடி ஏற்றினார்.முதல்வர்வெற்றிவேல் உறுதிமொழி வாசித்தார். கல்லுாரி பொருளாளர் வாசுதேவன் வாழ்த்தினார். தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் கல்லுாரிச் செயலாளர் சீனிவாசன் கொடி ஏற்றினார். கம்மவார் சங்கத்தின்தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத் தலைவர் பாண்டியராஜன், பொதுச் செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் தர்மலிங்கன் மாணவர்கள் பங்கேற்றனர். தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் செயலாளர் பெருமாள்சாமி கொடி ஏற்றினார். முதல்வர் பிரகாசம் வரவேற்றார். துணைத் தலைவர் பாண்டியராஜ் பேசினார். ஏற்பாடுகளை உதவி பயிற்றுநர் அபினாஷ் செய்திருந்தார். பயிற்றுநர் சேகர் நன்றி தெரிவித்தார். தேனி 18ம் கால்வாய் நீட்டிப்பு சிறப்பு கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ரமேஷ் கொடி ஏற்றினார். உதவிப் பொறியாளர் தினேஷ்குமார்,இளநிலை பொறியாளர் செல்லக்குமார், உதவியாளர் ஆரிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி நாடார் சரஸ்வதி பப்ளிக் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவியர் விடுதியின் செயலாளர் சவுந்திரபாண்டியன் கொடி ஏற்றினார். பள்ளியின் செயலாளர் ராஜமோகன், இணைச் செயலாளர் விவேகானந்தன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேனி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ராஜா கொடிஏற்றினார். பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், மோகன் பேசினர். தலைமை ஆசிரியை காஞசனாதேவி விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார். நிர்வாகிகள் பள்ளி வளாகத்தின் மரக்கன்றுகள் நட்டனர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் கல்வி நிறுவனங்கள் சார்பில் நாடார் சரஸ்வதி பள்ளியில் உறவின்முறை பொதுச் செயலாளர் ஆனந்தவேல் கொடி ஏற்றினார். தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர்ஜீவகன், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கலை நிகழ்சசிகள் நடந்தன. நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி அசோகன் கொடி ஏற்றினார். நாடார் சரஸ்வதி கல்வியியல்கல்லுாரியில் நிர்வாகி கோபி கொடி ஏற்றினார். நாடார் சரஸ்வதி பெண்கள் ஐ.டி.ஐ. மையத்தில் நிர்வாகி பாண்டிக்குமார் கொடி ஏற்றினார். நாடார் சரஸ்வதிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி ராமகிருஷ்ணன் கொடி ஏற்றினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி செந்தில்குமார் கொடி ஏற்றினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிநிர்வாகி விஜய் கொடி ஏற்றினார். தேனி நாடார் சரஸ்வதி பள்ளியில் ஆட்சி மன்றக்கழு உறுப்பினர் விஜயக்குமர் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ராமநாதன் பங்கேற்றனர். அல்லிநகரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அம்பி வெங்கடசாமி நாயுடு மக்கள் மன்றத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்து கொடியேற்றினார்.மண்டப தலைவர் முத்துகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ஸ்ரீராம்நகர் காங்கிரஸ் பவனில் வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன்கொடி ஏற்றினார். மாநிலச் செயலாளர் கண்ணுச்சாமி, மாவட்ட செயலாளர் மெல்வின், தேனி நகரத் தலைவர் ராஜன்அமர்சிங், செயலாளர் முருகவேல்ஆண்டிபட்டி வட்டாரத் தலைவர் மகாராஜன், பெரியகுளம் வட்டாரத் தலைவர் கஜேந்திரன், செயலாளர் துடிவீரன், பெரியகுளம் நகரத் தலைவர் ஷாஜகான்,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழனிச்செட்டிபட்டி இந்து நாடார் உறவின்முறை ஆர்.எஸ்., மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ்., நர்சரி பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் நிர்வாகத் தலைவர் சங்கரநாராயணன் கொடி ஏற்றினார். உறவின்முறை தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் காந்திராஜன், பள்ளி செயலாளர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர்ஜவஹர்லால், துணைத் தலைவர் ராஜன்அமர்சிங் மற்றும் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பரிசுகள் வழங்கப்பட்டன. தேனி நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில் சர்வேயர் அருண்குமார் கொடி ஏற்றினார். வரைவாளர் மணிவேல், உதவியாளர் பிரேம்சந்த் உள்ளிட்டஅலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் தேனி ராயல் லயன்ஸ் கிளப் தலைவர் பிரபு கொடி ஏற்றினார். முதல்வர் பரந்தாமன் வரவேற்றார். தேனி ராயல் அரிமா சங்க பட்டயத் தலைவர் செல்வகணேசன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வி சங்க செயலாளர் பாக்கியகுமாரி பரிசுகள் வழங்கினார். துணை முதல்வர் வினோத்குமார் நன்றி தெரிவித்தார்.ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பெரியகுளம்: வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வக்குமர பாண்டியன், பேரூராட்சி தலைவர் நடேசன் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் கவுதம் அசோக்குமார் கொடியேற்றினார். பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன் கொடியேற்றினார். வடகரை வாசகர் வட்ட தலைவர் முன்னிலை வகித்தார். நூலகர்கள் விசுவாசம், சண்முகம் மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் பிரசிடென்சி மழலையர் துவக்கப்பள்ளியில் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைவர் கோபாலகிருஷ்ணன் கொடியேற்றினார். பள்ளி பொருளாளர் சுகுமாரன் வரவேற்றார். முதல்வர் புவனேஸ்வரி நன்றி கூறினார். பெரியகுளம் கீழ வடகரை நூலகத்தில் புரவலர்கள் ஜெயராஜ் தலைமை வகித்தார். புரவலர் ராம்ஜிபாலாசிரியர் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் மோகன் கொடியேற்றினார். நூலகர் ராஜகோபால் வரவேற்றார். பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் செயலாளர் முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். பள்ளிக்குழு உறுப்பினர் தேவபிரியா இனிப்பு வழங்கினார். ஆசிரியர் பாண்டீஸ்வரன் நன்றி கூறினார். பெரியகுளம் நகர காங்., சார்பில் தலைவர் கனகசீதாபதி கொடியேற்றினார். நகர துணை தலைவர்கள் சுப்பிரமணியம், ஜான்பா, நகர செயலாளர் சுவாமி நாதன் பங்கேற்றனர். பெரியகுளம் நிர்மலா நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமை வகித்தார். செயலாளர் பெர்பெத்வோ எமிலி ஜாக்குலின் கொடியேற்றினார். பெரியகுளம் புத்தர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் துரை வேணுகோபால் கொடியேற்றினார். பெரியகுளம் பி.டி.ராஜன் நினைவு துவக்கப்பள்ளியில் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் லட்சுமணராஜா கொடியேற்றினார். பள்ளிக்குழு உறுப்பினர் பவானி மகேஸ்வரி பங்கேற்றார். தாமரைக்குளம் வெங்கடாசலபதி கோயில் வளாகத்தில் விழுதுகள் இளைஞர் மன்ற செயலாளர் சங்கிலிதுரை கொடியேற்றினார். அர்ச்சகர் சுந்தர சீனிவாசன் பங்கேற்றனர். பெரியகுளம் வடகரை நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் மணிகார்த்திக் கொடியேற்றினார். தென்கரை வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், நூலகர் குமரன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் 7ம் பகுதி நடுநிலைப் பள்ளியில், மக்கள் மன்றமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் இணைந்து சுதந்திர தின விழா கொண்டாடினர். தலைமை ஆசிரியர் ஆனந்தன் கொடியேற்றினார். மக்கள் மன்ற தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் வேல்முருகன், ராஜவேல் பங்கேற்றனர்.