உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா மரங்களில் பூச்சி தாக்குதல்

மா மரங்களில் பூச்சி தாக்குதல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மா மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் பூக்கள் உதிர்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் தென்பழனி, வேல்ச்சாமிபுரம், ஜி.உசிலம்பட்டி, கணேசபுரம், சித்தார்பட்டி கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமாக மா சாகுபடி உள்ளது. கல்லா, காசா, இமாம்பசந்த், பங்கனபள்ளி வகை மா மரங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது மா மரங்களில் பூக்கள் எடுத்து வருகிறது. பூக்களை தேடி வரும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்பட்டு பூக்கள் உதிர்ந்து விடுகிறது. மா மரங்களில் பூக்கள் எடுப்பதற்கான மருந்து தெளித்தும் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் தகுந்த ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை தெளிப்பதால் மரங்களின் காய்ப்பு தன்மையில் பாதிப்பு ஏற்படுகிறது. பூக்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆலோசனை வழங்க தோட்டக்கலை துறை முன் வர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி