உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாராயணத்தேவன்பட்டி - சுருளி அருவி ரோட்டில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நாராயணத்தேவன்பட்டி - சுருளி அருவி ரோட்டில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

கம்பம் : நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளி அருவியை இணைக்கும் பழையசுருளிரோட்டில் பாலம் அமைக்க எம்.எல்.ஏ. மகாராஜன் பூமி பூஜை நடத்தியும் பணி முடங்கிய அவலம் .பிரசித்திபெற்றது சுருளிஅருவி குளிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுருளி அருவிக்கு செல்ல தற்போதுள்ள ரோட்டை தவிர்த்து, பழைய சுருளி ரோடு உள்ளது. நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டியிலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோடு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. விசேஷ நாட்களில் போலீசார் இந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை ரோடு 160 மீ., தூர ரோடு தனியாரிடம் இருந்ததை மீட்டு ரோட்டை புதுப்பித்தனர். இதில் ரூ.46 லட்சம் செலவில் பாலம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் 160 மீ., தூர ரோடு பணிகள் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக பாலம் கட்டும் பணி துவங்கியிருக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால், பாலம் கட்டுவதற்கு ஒதுக்கியரூ.46 லட்சத்தை உரிய காலக்கெடுவில் பணி துவக்க வில்லை என கூறி அரசு திரும்ப பெற்றது.இந்த பாலம் கட்டப்பட்டால் நாராயணத்தேவன் பட்டியிலிந்து சுருளி அருவிக்கு பைபாஸ் ரோடு போன்று பயன்படும். ஆனால் கம்பம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பாலம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை.இதற்கிடையே இப் பாலம் கட்டுமானத்திற்கு இரு மதிப்பீடு தயார் செய்து கலெக்டர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. சாரல் விழாவின் போது இந்த ரோடு பயன்பாட்டிற்கு வந்திருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்.கலெக்டர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள இந்த மதிப்பீடுகளுக்கு ஒப்புதல் வழங்கி பாலம் அமைக்க கலெக்டர் ஷஜீவனா நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை