உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளின் விவரம் பதிவு அறிவுறுத்தல்

விவசாயிகளின் விவரம் பதிவு அறிவுறுத்தல்

சின்னமனூர்: விவசாயிகளின் நில விபரங்களை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். தவறும் பட்சத்தில் பிரதமரின் உதவித் தொகை நிறுத்தப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.விவசாயிகள் நில விபரம், பயிர் சாகுபடி, ஆதார் எண், அலைபேசி எண், சிட்டா , அடங்கல் போன்றவற்றை இ -சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம். அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்கு சென்று பதிவு செய்யலாம். கடந்த ஓராண்டாக இந்த பணிகளை வேளாண் துறை மேற்கொண்டு வருகின்றனர். பதிவு செய்த விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளின் மானியங்களை பெற இந்த எண் அவசியமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வேளாண் உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இதுவரை 100 சதவீதம் பதிவுகள் மேற்கொள்ள முடியவில்லை. கடமலைக் குண்டு, போடி, சின்னமனூர் வட்டாரங்களில் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களை தொடர்பு கொள்வது இயலாமல் உள்ளது. இது தொடர்பாக வேளாண் துறையினர் கூறுகையில், 'ஜூன் 30க்குள் பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் முதல் பிரதமரின் ஊக்கத் தொகை நிறுத்தப்படும். அரசின் மானியங்கள் பெற முடியாது,' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை