சர்வதேச யோகா தினம்
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் என்.சி.சி., மாணவர் படை சார்பில் சர்வதேச யோகா தினம் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. அலுவலக கண்காணிப்பாளர் யுவராஜசேகரன் முன்னிலை வகித்தார். என்.சி.சி., திட்ட அலுவலர் நாகலிங்கம் வரவேற்றார். யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து மாணவர்கள் எடுத்து கூறினர். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.