மேலும் செய்திகள்
ரேஷன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
08-Jul-2025
தேனி: மாவட்டத்தில் 48 ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடாமல் உள்ளனர்.கூட்டுறவுத்துறை மூலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் காலியாக இருந்த 41 விற்பனையாளர் 7 கட்டுனர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. கூட்டுறவுத்துறையினர் ஆள் சேர்ப்புநிலையம் மூலம் 2024 நவ., டிச.ல் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இத்தேர்வு முடிவுகள் 7 மாதங்களாக வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது.மற்ற மாவட்டங்களில் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 மாவட்டங்களில் தேர்வானவர்கள் விபரங்கள் அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இத்தேர்வில் தேர்வானவர்கள் விபரங்களை கூட்டுறவுத்துறை வெளியிடாமல் மவுனம் காக்கின்றனர். கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதால் விரைவில் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிட வேண்டும் என தேர்வில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08-Jul-2025