உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உயர்வுக்கு படி முகாமில் பங்கேற்க அழைப்பு 

உயர்வுக்கு படி முகாமில் பங்கேற்க அழைப்பு 

தேனி: மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்து கல்லுாரி செல்லாத மாணவர்கள், கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் இல்லாத மாணவர்கள், அதே போல் 10ம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லாத மாணவர்களுக்கு வழிகாட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'உயர்வுக்கு படி' வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லுாரியில் செப்.2ல் நடக்கிறது. நிகழ்ச்சியில் கல்விக்கடன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியின் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கான உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சி நடந்தது. பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் தலைமை வகித்தார். கல்லுாரிச் செயலாளர் தாமோதரன், திட்ட மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி உஷா முன்னிலை வகித்தனர். விழாவில் தேனி கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி, சங்கத்தின் உடற்கல்வித் துறை தலைவர் சிவக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரமாபிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ