உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

கல்லுாரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் கல்லுாரி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் ஜோஹோ பன்னாட்டு நிறுவன கணினி அறிவியல் துறையில் இரு மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் எம் அண்டு எஸ் நிறுவனத்திற்கு 5 பேர், சென்னை என்.எஸ்.கே.,பேரிங் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த 4 மாணவர்கள், இயந்திரவியல் துறையில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஜி.கே., பவர் எக்ஸ்பெர்டிஸ் நிறுவனத்தில் 7 மாணவர்கள், பெரமோட ரெப்பர் நிறுவனத்தில் கட்டிடவில் துறை மாணவ்ரகள் 6 பேர், பி.எஸ்.ஏ., நிறுவனத்தில் 2 மாணவிகள் என மொத்தம் 36 மாணவர்கள் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்ப்பட்ட மாணவர்களுககு தேனி இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பணி நியமன ஆணை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ