உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணிச்சுமையால் ஐ.டி., ஊழியர் தற்கொலை

பணிச்சுமையால் ஐ.டி., ஊழியர் தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்தவர் விவேக் 35. சென்னை ஐ.டி., கம்பெனியில் 'டீம் லீடராக' வீட்டிலிருந்து பணிபுரிந்தார். இவரது மனைவி ஆரோக்கியஜெனிட்டா 27. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பணி உயர்வு பெற்றார். பணிச்சுமை குறித்து மனைவியிடம் புலம்பி வந்தார். இந்நிலையில் விவேக் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரில்,தென்கரை இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி விசாரணை செய்து வருகிறார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ