ஜமாபந்தி இன்று துவக்கம்
தேனி : மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி இன்று துவங்கி மே 30 வரை நடக்கிறது.பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மே 28 வரை நடக்கிறது. உத்தமபாளையம் தாலுகாவில் டி.ஆர்.ஓ., முத்துலட்சுமி தலைமையில் மே 30 வரை நடக்கிறது. ஆண்டிபட்டி தாலுகாவில் பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில் மே 29 வரையிலும், தேனியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் மே 27 வரையிலும், போடியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது தலைமையில் மே 28 வரையிலும் ஜமாபந்தி நடக்கிறது. இதில் மே 24,25,26 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைபெறாது.