மல்லிகை பூ கிலோ ரூ. 1800
தேனி: தீபாவளியை யொட்டி தேனியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை கிலோ ரூ. 1800க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.2ஆயிரத்திற்கும் விற்பனை ஆகின. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று மல்லிகை கிலோ ரூ. 1800, முல்லை ரூ. 1400, கனகாம்பரம் ரூ.2ஆயிரம், ஜாதிப்பூ ரூ.800, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 150, அரளி ரூ. 300, கோழிக்கொண்டை,செண்டுமல்லி ரூ.50, பட்டன்ரோஸ் ரூ. 300, பன்னீர் ரோஸ் ரூ.200க்கும் விற்பனை ஆனது. பூக்கள் விலை உயர்வு பற்றி வியாபாரி கண்ணன் கூறியதாவது: பூக்கள் வரத்து சீராக உள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகை என்பதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இன்றும் இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றார்.