உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

தேனி: தேனியில் மல்லிகைப்பூ சில்லரை விலையில் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.தேனி பூ மார்க்கெட்டிற்கு பூதிப்புரம், கொடுவிலார்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூர், உப்புக்கோட்டை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கார்த்திகை மாதப்பிறப்பான நேற்று மல்லிகை பூ கிலோ ரூ. 1700 வரை விற்பனையானது. சில்லரையில் 100 கிராம் ரூ.200 என கிலோ ரூ.2ஆயிரத்திற்கு விற்பனையானது. விலை உயர்வால் பொதுமக்கள் 50, 100 கிராம் என குறைத்து வாங்கி சென்றனர். கிலோ ரூ.20க்கு விற்ற துளசி நேற்று இருமடங்கு உயர்ந்து ரூ.40க்கு விற்பனையானது.பூ வியாபாரி குமார் கூறுகையில், மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பூக்கள் வரத்து குறைவாக வந்தது. கடைக்கு வழக்கமாக 100 கிலோ வந்த மல்லிகை தற்போது 10கிலோ அளவில் வரத்து உள்ளது. தற்போது பனி தாக்கமும் அதிகரித்துள்ளால் மல்லிகை பூ வரத்து மிக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பனியின் தாக்கம் குறைந்து, வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை