கம்பமெட்டில் ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி: 11 பேர் காயம் 11 தொழிலாளர்கள் காயம்
கம்பம் : கம்பமெட்டு மலைப் பாதையில் நேற்று இரவு அரசு பஸ்சிற்கு வழிவிட ஒதுங்கிய போது ஜீப் பாறையில் மோதி கவிழ்ந்ததில் டிரைவர் ரோஷன்பரூக் 67,பலியானார். 11 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.கேரள மாநிலம், நெடுங்கண்டத்திலிருந்து நேற்று மாலை ஜீப் கம்பம் நோக்கி வந்தது. ஜீப்பை கம்பம் புது பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் பரூக் ஒட்டி வந்துள்ளார். ஜீப்பில் அய்யம்பட்டி, பி.சி.பட்டி, ஆனைமலையன்பட்டி, கம்பம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் இருந்தனர். கம்பமெட்டு மலைப் பாதையில் ஜீப் கம்பம் நோக்கி வந்த போது, கம்பத்திலிருந்து நெடுங்கண்டம் நோக்கி சென்று அரசு போக்குவரத்து கழக பஸ்சிற்கு கீழிருந்து 3 வது வளைவில் வழிவிட ஒதுங்கிய போது, ஜீப் பக்கவாட்டில் இருந்த பாறையில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் டிரைவர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 11 தொழிலாளர்களும் காயம் ஏற்பட்டது. டிரைவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்தார். கம்பம் வடக்கு எஸ்.ஐ. நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.