உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கத வை உ டைத்து நகை திருட்டு

கத வை உ டைத்து நகை திருட்டு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை புதூரைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு 41, குடும்பத்துடன் கோவையில் தங்கி பணி செய்து வருகிறார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்தார். இரு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த ஒரு பவுன் செயின் திருடு போயிருந்தது. வீட்டில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பெட்டியை உடைத்து ஒயரையும் அறுத்து சென்று விட்டனர். தினேஷ்பாபு கொடுத்த புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ