உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

போடி: போடி அருகே மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி 50. இவர் 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று வீடு திரும்பி உள்ளார். வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த செயின், மோதிரங்கள் உட்பட மூன்றே முக்கால் பவுன் தங்கநகை, ரூ. 50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. ஈஸ்வரி புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை