உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் வேலை வாய்ப்பு மேளா

மூணாறில் வேலை வாய்ப்பு மேளா

மூணாறு: மூணாறு ஊராட்சி சார்பில் இன்று நடக்கும் வளர்ச்சி கூட்டத்தின் முன்னோடியாக வேலை வாய்ப்பு மேளா நேற்று துவங்கியது. கேரளாவில் ஊராட்சிகள் மூலம் அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, வரும் காலங்களில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஊராட்சிகள் தோறும் வளர்ச்சி கூட்டம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மூணாறு ஊராட்சி சார்பில் வளர்ச்சி கூட்டம் இன்று (அக்.18) நடக்கிறது. அதனையொட்டி சுய தொழில் புரிவோருக்கு உதவும் வகையில் வேலை வாய்ப்பு மேளா ஊராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று துவங்கியது. அதனை ஊராட்சி துணை தலைவர் மார்ஸ் பீட்டர் துவக்கி வைத்தார். அதேபோல் சுகாதாரம், கலால், சமூக நலம் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. அவற்றை ஊராட்சி தலைவர் மணிமொழி துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா, மூணாறு ஊராட்சி செயலர் உதயகுமார் உள்பட ஊராட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ