உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாக்கு மர வளர்ப்பில் ஆர்வம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு

பாக்கு மர வளர்ப்பில் ஆர்வம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு

போடி: போடி மலைப்பகுதிகளில் பாக்குக்கு நல்ல விலை கிடைப்பதால் பாக்கு மரங்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.போடி குரங்கணி, கொட்டகுடி, முந்தல், பிச்சாங்கரை, ஊத்தாம்பாறை, கொம்புதூக்கி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர். பாக்கு மரங்களை நட்டு வைத்து மூன்று ஆண்டுகளில் பலன் தர துவங்கி விடும். பாக்கிற்கான சீசன் ஜூனில் துவங்கி ஜன., இறுதி வரை இருக்கும்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உரிக்காத பாக்கு கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரை இருந்தது. தற்போது கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். உரிக்காத பாக்குகளை அரிவாள் மனை, கத்தி மூலம் அறுத்து கொட்டை பாக்கு, சுருள் பாக்கு என சிறிது, சிறிதாக அறுத்து தொழிலாளர்கள் தரம் பிரிக்கின்றனர்.இவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.250 வரையும், வீட்டில் வேலை இல்லாத போது ரூ.350 வரை கூட பெண்கள் சம்பாதிக்கின்றனர். வீட்டில் இருந்தபடி மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. போடி பகுதியில் பாக்கு உரிக்கும் தொழிலில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு உள்ளனர். பாக்குக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் பாக்கு மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை