உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீண்

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீண்

பெரியகுளம்: பெரியகுளம்- - தேனி மாநில நெடுஞ்சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு எதிரே, தென்கரை, தாமரைக்குளம் பேரூராட்சிக்களுக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. குடிநீர் செல்லும் குழாய் 4 இடங்களில் சிறிதும், பெரிதுமாக உடைந்துள்ளது. இதனால் ஏராளமான லிட்டர் குடிநீர் ரோட்டில் தேங்கி வீணாகிறது. இதனால் இரு பேரூராட்சிக்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் சேதமடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைத்த பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை