உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேேலா இந்தியா போட்டி: தமிழக அணிக்கு தேனியில் பயிற்சி

கேேலா இந்தியா போட்டி: தமிழக அணிக்கு தேனியில் பயிற்சி

தேனி, : கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் ஜன.,19 முதல் ஜன.,31 வரை நடக்கிறது. இப்போட்டிகள் மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் கோ கோ போட்டிகள் மதுரையில் ஜன.,26 முதல் ஜன.,31 வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி நவ.,ல் தேர்வு செய்யப்பட்டது. அணிக்கு 15 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக அணியின் பயிற்சியாளர் புவனா, மேலாளர் கீதா ஆகியோர் கூறுகையில், தமிழக அணியில் கோவை, மதுரை, திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வாகி உள்ளனர். தேசிய அளவில் நடக்க உள்ள கோ கோ போட்டியில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில அணிகள் பங்கேற்கின்றன. வீராங்கனைகளுக்கு தினமும் உடற்பயிற்சி, தொடரோட்ட பயிற்சி, மலையேறும் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் தேசிய அளவிலான போட்டியில் பின்பற்றப்படுவது போல் மேட் பயன்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி ஜன.,21 வரை வழங்கப்பட உள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை