உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாக்கடை கழிவுநீர் தேங்கும் மெயின்ரோடு வேடிக்கை பார்க்கும் கம்பம் நகராட்சி

சாக்கடை கழிவுநீர் தேங்கும் மெயின்ரோடு வேடிக்கை பார்க்கும் கம்பம் நகராட்சி

கம்பம்: கம்பம் நகராட்சியின் மெத்தனப் போக்கால், மெயின் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் நிரம்பி வழிகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமப்படுவதுடன், அப்பகுதியில் செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.இந்நகராட்சியின் கம்பம் மெயின்ரோடு காந்தி சிலை மேற்கு பக்கம் உள்ள தேவாங்கர் வீதியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லாமல் கடந்த பல பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. அவ்வப்போது நகராட்சியின் கழிவு நீர் ஊர்தியை பயன்படுத்தி கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தி வந்தனர். கடந்த 10 நாட்களாக நகராட்சி கண்டு கொள்ளவில்லை. விளைவு கழிவு நீர் மெயின் ரோட்டில் வழிந்தோடுகிறது. இந்த ரோட்டில் வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன. வாகன டயர்கள் பட்டு கழிவு நீர் நடந்து செல்பவர்கள் மீதும், டூவீலர்களில் செல்வோர் மீதும் பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பொது மக்கள் சாக்கடை கழிவு நீர் என்பது தெரிவதால் முகம் சுளிக்கின்றனர். இதனால் பலர் மெயின் ரோட்டை பயன்படுத்துவதையே தவிர்த்து விட்டனர். இந்த பிரச்னை கடந்த ஓராண்டிற்கு மேல் உள்ளதாகவும், பல முறை கூறியும், நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மெயின்ரோடே சாக்கடையாக மாறுவதை நகராட்சி வேடிக்கை பார்த்து வருவது வேதனையாக இருப்பதாக பொது மக்கள் குமுறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை