உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி 7 நாட்கள் நடக்க உள்ளது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் இன்று (அக்.22ல்) மாலை 6:00 மணிக்கு பாலசுப்பிரமணியர், விநாயகர், வீரபாகு ஆகியோருக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்க உள்ளது. 7 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை நடக்கும். கோயில் வளாகத்தில் பக்தர்கள் கந்த சஷ்டி பாடுவர். 5ம் நாள் அக்.26 ல் பெரியநாயகி அம்மனிடம் பாலசுப்பிரமணியர் வேல் வாங்கி, அக்.27 மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், ஏழாம் நாளான அக்.28ல் வள்ளி, தெய்வானை, பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடக்கும். ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர். முன்பு திருவிழா குறித்து அறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன் நோட்டீஸ் வினியோகிக்கப்படும். இன்று திருவிழா துவங்க உள்ள நிலையில் பக்தர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யவில்லை. கோயில் அலுவலகத்தில் கேட்டபோது, 'புரூப் பார்த்து அனுப்ப தாமதமாகிவிட்டது. இன்று நோட்டீஸ் வந்தவுடன் வழங்கப்படும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை