உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்டமனுார் பள்ளி அணி மாநில போட்டிக்கு தேர்வு

கண்டமனுார் பள்ளி அணி மாநில போட்டிக்கு தேர்வு

போடி: தேனி மாவட்ட கைப்பந்து போட்டியில் கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தேர்வானது. வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 17 அணிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவில் தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளி, ஆண்டிபட்டி பத்மராமசாமி மெட்ரிக் பள்ளி, போடி ஜ.கா.நி., பள்ளி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளி, பெரியகுளம் எட்வர்ட் நடுநிலைப்பள்ளி, கம்பம் நாக மணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாகமணி யம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குள்ளபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, தேனி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேனி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் தேனி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் ஜே.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடமும், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். முதலிடம் பெற்ற அணி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ