உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கத்திக்குத்து: ஒருவர் கைது

கத்திக்குத்து: ஒருவர் கைது

பெரியகுளம்:பெரியகுளம் எ. புதுக்கோட்டை அருளானந்தபுரம் பிரபுதாஸ் பட்டுராஜன். முருகமலை பிரிவு அருகே மீன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் தேனி அரண்மனை புதூர் இளையராஜா 42, வேலை செய்கிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கணபதி 55, என்பவருடன் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இளையராஜாவை கணபதி கத்தியால் குத்தினார். தடுக்க வந்த பிரபுதாஸ்பட்டுராஜனையும் தாக்கினார். காயமடைந்த இளையராஜா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கணபதியை கைது செய்து வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை