கிருஷ்ணர் ராதை துளசி கல்யாணம்
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர் ராதை துளசி கல்யாணம் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் துளசி கல்யாணம் பூஜை நடந்தது. கிருஷ்ணர், ராதை திருமணம் கோலத்தில் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. நாமகீர்த்தனம், திருப்பாவை சேவித்தல், மதுரகீதம் பஜனை, ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாமத்வார் பிரார்த்தனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்திருந்த னர்.