உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகன மேடை அமைக்க எதிர்ப்பு குச்சனுார் பேரூராட்சி முற்றுகை

தகன மேடை அமைக்க எதிர்ப்பு குச்சனுார் பேரூராட்சி முற்றுகை

சின்னமனுார்: குச்சனுாரில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குச்சனுார் பேரூராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. குச்சனுார் - கூளையனுார் ரோட்டில் ராஜேந்திரபுரத்தில் பொது மயானம் உள்ளது. எரிவாயு தகன மேடை இந்த மயானத்திற்குள் அமைக்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று காலை மயானத்திற்குள் பணிகளை துவக்க சென்ற போது, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பணிகள் நிறுத்தப்பட்டது. அப்பகுதியினர் கூறுகையில், 'எரிவாயு தகன மேடை அமைத்தால் அருகில் குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் தகன மேடை அமைத்தால் அடக்கம் செய்யும் போது சடங்குகள் செய்ய இடமிருக்காது என்று வாதம் செய்தனர். இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முருகன் கூறுகையில், ' எரிவாயு தகன மேடை அமைப்பது எதிர்காலத்திற்கு தேவையான திட்டமாகும். இதனை வேறு இடத்தில் அமைக்க இடமும் இல்லை. இது குறித்து கலெக்டரிடம் தகவல் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ