உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பல ஆண்டாக முடங்கிய குரங்கணி டாப் ஸ்டேஷன் ரோப்கார் திட்டம்

பல ஆண்டாக முடங்கிய குரங்கணி டாப் ஸ்டேஷன் ரோப்கார் திட்டம்

போடி: குரங்கணி - டாப் ஸ்டேஷன் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சியில் டாப்ஸ்டேஷன் அமைந்து உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப் பகுதிக்கு போடியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள குரங்கணி சாம்பலாறு வரை ரோடு வசதி உள்ளது. அங்கிருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள டாப் ஸ்டேஷனுக்கு ரோடு வசதி இல்லை. இதனால் போடியில் இருந்து மூணாறுக்கு செல்ல 40 கி.மீ., தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வழியாக மூணாறுக்கு 'டிரக்கிங்' செல்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் டாப்ஸ்டேஷன் -- குரங்கணிக்கு ரோப்கார் அமைத்திட டாடா நிறுவனம் அனுமதி கோரியது. என்ன காரணத்தினாலோ இத் திட்டம் முடங்கியது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் குரங்கணி வந்த அமைச்சர்கள் பெரியசாமி, எ.வ.வேலு - ரோப் கார் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சுற்றலா மேம்பட ரோப்கார் திட்டம் செயல்படுத்திட சுற்றுலா பயணிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ