சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி,பாலியல் தொந்தரவு செய்த கூலித்தொழிலாளி வெள்ளைத்துரைக்கு 61, பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தேனி அருகே குன்னுார் கிழக்கு தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி வெள்ளைத்துரை 61, கடத்திச் சென்று 2021 அக்.24ல் பாலியல் தொந்தரவு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்மொழி, தொழிலாளி மீது குழந்தை கடத்தல், போக்சோவில் கைது செய்தார். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் அமுதா ஆஜரானார். நேற்று விசாரணைமுடிந்து குற்றவாளி கூலித் தொழிலாளி வெள்ளத்துரைக்கு 10 ஆண்டுகள் சிறை,ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.