மண் திருடிய லாரி, டிராக்டர் பறிமுதல்
தேனி :' பாலகோம்பை பகுதியில் நேற்று அதிகாலை கனிமவளத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் ஓடையில் இருந்து மண் அள்ளி வந்த ஒரு லாரி, இரு டிராக்டரை நிறுத்தி ஆவணங்கள் கேட்ட போது வாகனங்களில் இருந்த டிரைவர்கள் தப்பி ஓடினர். 4 யூனிட் மண்ணுடன் கனிமவளத்துறையினர் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் பாலகோம்பை அழகர், டிராக்டர் உரிமையாளர்கள் ஜெயக்குமார், ஆண்டவரை போலீசார் விசாரிக்கின்றனர்.