மறையூர் சந்தன மரக்காட்டில் சிறுத்தை நடமாட்டம்: வனக்காவலர்கள் அச்சம்
மூணாறு: மறையூரில் சந்தன மரக்காட்டில் சிறுத்தை நடமாடியதால் வனக்காவலர்கள், பொது மக்கள் ஆகியோர் அச்சம் அடைந்தனர். மூணா று அருகே மறையூரில் சந்தன மரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அங்குள்ள நாச்சிவயல் குப்பன் ஓடை பகுதியில் சந்தன மரக்காட்டில் மரத்தின் மீது சிறுத்தையை நேற்று முன்தினம் மாலை சிலர் பார்த்தனர். அந்த சி றுத்தை சிறிது நேரத்தில் சந்தன காட்டில் நடமாடியது. சந்தனமரக் காடுகளில் வனக்காவலர்கள் இரவு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வதுண்டு. அவர் கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்து வருகின்றனர். தற்போது சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்ததால் பொது மக்கள் மட்டும் இன்றி வனக்காவலர்களும் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.