உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழு நோய் கண்டறியும் முகாம் மூன்று வட்டாரங்களில் துவக்கம்

தொழு நோய் கண்டறியும் முகாம் மூன்று வட்டாரங்களில் துவக்கம்

கம்பம்: மாவட்டத்தில் கம்பம், தேவதானப்பட்டி, சுப்புலாபுரம் வட்டாரங்களில் நேற்றுமுதல் தொழு நோய் கண்டறியும் முகாம் துவங்கியது.தமிழகம் முழுவதும் தொழு நோய் கண்டறியும் முகாம் துவங்கியது. தேனி மாவட்டத்தில் கம்பம் , தேவதானப்பட்டி, சுப்புலாபுரம் வட்டாரங்களில் இந்த பணி 211 குழுக்கள் மூலம் துவங்கியது. இதற்கு முன் கண்டறிந்து சிகிச்சை தரும் முகாம்களாக நடத்தப்பட்டது. தற்போது கண்டறிந்து முழுமையாக ஒழிக்கும் முகாமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறுகையில், தொற்றும் தொழு நோய், தொற்றா தொழு நோய் என் இரண்டு வகைப்படும். இதில் தொற்றும் தொழு நோய் ஒரு வித பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் அதன் மூலம் பரவுகிறது. பரவும் பாக்டீரியா 5 முதல் 7 ஆண்டுகள் வரை உடலில் தங்கி இருக்கும். அதன் பின்பே பாதிப்பு தெரிய துவங்கும். தற்போது முழுமையாக ஒழித்திட இந்த முகாம் துவங்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் இந்த பணி வீடு வீடாக மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ