உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழில் பெயர் பலகை வைக்க கடிதம் தினமலர் செய்தி எதிரொலி

தமிழில் பெயர் பலகை வைக்க கடிதம் தினமலர் செய்தி எதிரொலி

தேனி : 'தினமலர் செய்தி எதிரொலியாக' மாவட்ட அதிகாரிகள் தங்கள் வாகன முகப்பில் தமிழ் பெயர் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி துறையில் இருந்து கடிதம் அனுப்பபட்டுள்ளது.மாவட்டத்தில் பல்வேறு நிலையிலான அரசு துறை அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான அதிகாரிகளின் வாகனங்களில் முகப்பு பகுதியில் தமிழக அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் துறையின் பெயர், அதிகாரியின் நிலை உள்ளிட்ட விபரம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த துறை அதிகாரிகள் வந்துள்ளனர் என தெரிவதில்லை. அதிகாரிகள் வாகனங்களில் தமிழ் பயன்படுத்த வலியுறுத்தி தினமலர் நாளிதழில் 2025 மார்ச் 28 ல் 'தமிழ் பெயர் பலகையை தவிர்க்கும் அரசு அதிகாரிகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,' வாகனங்கள் முகப்பில் ஆங்கில பெயர்பலகை வைத்திருப்பின், அதனை மாற்றிட வேண்டும், மாற்றி அதன் விபரத்தை தெரிவிக்குமாறு ' கடிதம் அனுப்பி உள்ளார்.இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆங்கில பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ