சிறுமி மாயம்: தாய் புகார்
கடமலைக்குண்டு : வருஷநாடு வைகை நகரை சேர்ந்தவர் சாந்தி 40, இவரது 17 வயது மகள் 10ம் வகுப்பு படிப்புக்குப் பின் கடமலைக்குண்டில் உள்ள தனியார் தையல் பயிற்சி பள்ளியில் சில மாதமாக பயிற்சி பெற்று வந்தார். இரு நாட்களுக்கு முன் தையல் பயிற்சி பள்ளிக்கு சென்றவர், பயிற்சி முடித்தபின் திரும்ப வரவில்லை. காணாமல் போன சிறுமி குறித்து பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாய் சாந்தி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.