உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் சக்கரம் ஏறி லாரி டிரைவர் காயம்

பஸ் சக்கரம் ஏறி லாரி டிரைவர் காயம்

தேனி:கருவேல்நாயக்கன்பட்டி லாரி டிரைவர் சின்னன் 37. இவரது மனைவி கனகவள்ளியை தேனி புது பஸ் ஸ்டாண்டில் மதுரை செல்லும் தனியார் பஸ்சில் ஏற்றிவிட்டு அதே பஸ்சில் அமர்ந்து மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். பஸ் புறப்படும் போது சின்னன், பஸ் டிரைவர் தீபக்கிடம் கூறிவிட்டு இறங்கினார். அப்போது சின்னன் கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் கைவிரல்கள், இடுப்பு பகுதியில் சின்னன் காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். கனகவள்ளி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை