உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கடமலைக்குண்டு : கண்டமனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ., மலைச்சாமி மற்றும் போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.கண்டமனூர் சத்யா காலனியில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 1000 க்கும் மேற்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. கண்டமனூர் சத்யா காலனியை சேர்ந்த சமயணன் 72, கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.4900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ