கூடலுாரில் ஏர் லாக் குழாயில் இருந்து வீணாக வெளியேறிய மதுரை குடிநீர்
கூடலுார்: கூடலுார் முல்லைப் பெரியாற்றில் இருந்து மதுரைக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் 2022ல் துவக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதற்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார் கம்பம், உத்தமபாளையம் வழியாக மதுரை வரை மெயின் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏர் லாக் குழாய் உள்ளது. கூடலுார் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள ஏர் லாக் குழாயில் இருந்து அடிக்கடி குடிநீர் பல மணி நேரம் வீணாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணியிலிருந்து வெளியேறி அப்பகுதியில் குளம் போல் தேங்கியது. பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் வீணாக வெளியேறும் குடிநீரை தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.