உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது

வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது

பெரியகுளம்: பெரியகுளம் மாரியம்மன் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 89.இவரது மகள் பிரேமா 52. உடல்நிலை சரியில்லாதவர். இவர்களது வீட்டில் 2024ல் சந்தை தெருவைச் சேர்ந்த பாண்டீஸ்வரி 40. மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளத்திற்கு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் பாண்டீஸ்வரி, பிரேமா கழுத்தில் அணிந்திருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் தங்கச்செயின், பீரோவில்வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை திருடினார். தென்கரை போலீசார் பாண்டீஸ்வரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ