உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலகத்தில் அடிப்பகுதி சேதமடைந்த தபால் பெட்டி

கலெக்டர் அலுவலகத்தில் அடிப்பகுதி சேதமடைந்த தபால் பெட்டி

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளதால் மழைநீர் உட்புகுந்து கடிதங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் சிமென்ட் தளம் மீது தபால் பெட்டி, மரத்தில் சிறிய தபால் பெட்டி என இரு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் கான்கிரீட் தளத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியின் அடிப்பகுதி துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. கான்கிரீட்பகுதியும் சேதமடைந்துள்ளதால், கடிதங்கள் வெளியில் தெரியும் வகையில் உள்ளன. மழை அதிகம் பெய்தால் உட்புகும் நிலை உள்ளது. தபால் துறை சேதமடைந்த தபால் பெட்டியை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை