உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ., வேல்முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். குப்பிநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். விசாரணையில் கடமலைக்குண்டு அருகே நரியூத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் 29, என்பதும், அவரிடம் சோதனை செய்ததில் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷ் பாண்டியை கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை