உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெண்ணை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டவர் கைது

 பெண்ணை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டவர் கைது

தேனி: தேனியில் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளிட்ட ஆண்டிபட்டி ஜான்பாண்டியனை 26, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஆண்டிபட்டி ஜான்பாண்டியன். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இட்லி கடை வைத்துள்ளார். இவருக்கும் ஆண்டிபட்டியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் ஜான்பாண்டியனுக்கு எதிராக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்பாண்டியன், தனது எதிராக பேசிய மற்றொருவரின் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்தார். அதனை சமூக வலைதளங்களில் பரப்பினார். இதனை அறிந்த இளைஞர் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் ஜான்பாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ