உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

வீரபாண்டி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

தேனி : மாணவர்களுக்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பழனிசெட்டிபட்டி விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சிவா, அபிஷேக் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வீரபாண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த இரு டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர். ஒரு டூவீலரில் வந்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சிவா, அபிஷேக் டூவீலரை நிறுத்தி விட்டு ஓடினர். மற்றொரு டூவீலரில் வந்த விக்னேஷ்வரனிடமிருந்த 22, ரூ.600 மதிப்புள்ள 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். மூவரும் இணைந்து மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதாக விசாரணையில் விக்னேஷ்வரன் போலீசாரிடம் தெரிவித்தார். இரு டூவீலர்கள், கஞ்சாவை பறிமுதல் செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !